Published : 14 Dec 2016 02:33 PM
Last Updated : 14 Dec 2016 02:33 PM

பேசும் படம்: புயல் நிவாரணப் பணியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர்

'வார்தா' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் வகையில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் நிவாரணப் பணியில் ஈடுபட்டனர்.

‘வார்தா’ புயலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் சாய்ந்தன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் விநியோகம் தடைபட்டது. மின்சாரம், பால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மரங்களை அகற் றுவது உள்ளிட்ட பணிகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நிவாரணப் பணிக்கு அரசு வரம்வரை காத்திருக்காமல் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர் களத்தில் இறங்கினர். 20 பேர் கொண்ட குழு மதுரவாயல், நொளம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சாய்ந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சில அத்தியாவசியத் தேவைகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் புதுச்சேரியைச் சார்ந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணித் தோழர்கள் சப்பாத்தி, பிஸ்கெட் பாக்கெட்டுகள், பிரட் போன்ற உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகம் செய்தனர்.

நிவாரணப் பணியில் ஈடுபட்ட பு.மா.இமா.குழுவினர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x