

மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு வங்கிகள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிவீர்கள். இதற்கு ஏதாவது தீர்வு கிடைக் குமா என வங்கிகள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றன. ஆனால், பணத்தட்டுப்பாடு காரண மாக இப்பிரச்சினை தொடர் கதையாக உள்ளது. 100, 500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து தட்டுப்பாடாக உள்ளது. ரூ.2000 நோட்டுக்கு சில்லறை கிடைக்காது என்பதற்காக மக்கள் அவற்றை வாங்க மறுக்கின்றனர்.
தற்போது மாதத்தின் முதல் வாரம் என்பதால் தங்களது சம்பளப் பணத்தை எடுப்பதற்காக பொதுமக்கள் வங்கிகளில் குவி கின்றனர். அவர்களுக்கு வழங்க வங்கிகளில் போதிய பணம் இல் லாததால், வங்கி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனர்.
மேலும், பொதுத்துறை வங்கி களைவிட தனியார் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அதிக அளவில் பணம் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி தினமும் எந்தெந்த வங்கிகளுக்கு எவ்வளவு பணம் விநியோகம் செய் கிறது என்ற விவரத்தை வெளிப் படையாக தெரிவிக்க வேண்டும்.
அனைத்து வங்கிகளுக்கும் போதிய அளவு பணம் வழங்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஏடிஎம்களும் உடனடியாக செயல்பட வைக்க வேண்டும். வங்கி ஊழியர்கள், அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் தெரி விக்கப்பட்டுள்ளது.