

மியூசிக் அகாடமியின் தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரபல வயலின் கலைஞர் ஏ.கன்யாகுமாரிக்கு ‘சங்கீதா கலாநிதி’ விருது வழங்கி கவுரவித்தார் என்று நேற்று ‘தி இந்து’வில் வெளியான செய்தி தவறானது.
உண்மையில் கன்யாகுமாரிக்கு அமைச்சர் வழங்கியது சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது. ஒவ்வொரு வருடமும் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வாகும் கலைஞருக்கு ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசுடன் ‘இந்து’ குழுமம் வழங்கும் விருது இது.
மியூசிக் அகாடமியில் சங்கீத கலாநிதி விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர், அகாடமியின் மாநாட்டுக்குத் தலைமை தாங்குவார். டிசம்பர் 31-ம் தேதி வரையில் காலை நேரத்தில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும். ஜனவரி முதல் தேதியன்று காலை ஓபன் ஹவுஸ் நிகழ்வு இருக்கும். அன்றைய தினம் மாலை நடைபெறும் ‘சதஸ்’ மேடையில் சங்கீத கலாநிதி வழங்கப்படுவதுதான் பல வருடப் பழக்கம்.
மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் ஜனவரி முதல் தேதியன்று கன்யாகுமாரிக்கு சங்கீத கலாநிதி விருது வழங்குகிறார்.