டிடிசிபி அனுமதி வாங்குவதில் சந்தேகமா? - உதவி எண்களை அறிவித்தது தமிழக அரசு

கோப்புப் படம் | மனைப்பிரிவு
கோப்புப் படம் | மனைப்பிரிவு
Updated on
1 min read

சென்னை: நகர் ஊரமைப்பு இயக்ககத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வாங்குவது தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண தொடர்பு எண் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து நகர் ஊரமைப்பு இயக்குநர் வெளியிட்டுள்ள தகவல்: அரசாணை எண்.56, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, நாள்.18.04.2022-ல் ஒற்றை சாளர இணையம் மூலம் கட்டிடம் மற்றும் மனைப்பிரிவு வரைபடங்களுக்கு ஒப்புதல் அளிக்க முதல் கட்டமாக நகர் ஊரமைப்புத் துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு Golive அனுமதி அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 24.06.2022 முதல் மனைப் பிரிவு வரைபடத்திற்கான விண்ணப்பங்களுக்கும் மற்றும் 01.09.2022 முதல் கட்டிடம் மற்றும் நில உபயோக மாற்றத்திற்கான விண்ணப்பங்களுக்கும் ஒற்றை சாளர இணையதளம் மூலமாக ஒப்புதல் அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இது தொடர்பாக, விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யும்பொழுது ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு வழங்கும் பொருட்டு தொலைபேசி உதவி எண்.044 29585247 மற்றும் மின் அஞ்சல் முகவரி support_swp.dtcp@tn.gov.n ஏற்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இச்சேவையினை அலுவலக நேரங்களில் பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in