சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்தபோது அவதூறாக பேசி மிரட்டியதால் சமூக ஆர்வலர் தற்கொலை முயற்சி

கணேசன்
கணேசன்
Updated on
1 min read

சென்னை: சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பு குறித்துபுகாரளிக்க வந்தபோது போலீஸார் அவதூறாக பேசி மிரட்டியதால் சமூக ஆர்வலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை திருவள்ளுவர் நகர்ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் கணேசன் (52). சமூக ஆர்வலரான இவர், சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை சமூக விரோதிகள் ஆக்கிரமித்து விற்பனை செய்வதாக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையறிந்த சமூக விரோதிகள் சிலர், கணேசனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து அவர்துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை வாங்கிய போலீஸார், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், ‘இனி இதுபோல் புகார் கொடுக்க வந்தால் உன் மீது வழக்கு பதிவு செய்வோம்’ என மிரட்டி அவதூறாக பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால், மனவேதனை அடைந்த கணேசன், நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் ராயப்பேட்டை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்கொலை முயற்சிக்கு முன்பாக கணேசன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,அவர் பேசியிருப்பதாவது: பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இந்த பகுதி சதுப்பு நிலத்தை துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமாருடன் ரவுடிகள் சேர்ந்து ஆக்கிரமித்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து கேட்டபோது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படி உதை வாங்கி வாழ்வதைவிட சாவதே மேல் என தற்கொலைக்கு முயன்றேன். என் சாவின் மூலமாவது நல்லது நடக்கட்டும். இவ்வாறு கணேசன் பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in