Published : 22 Dec 2016 01:13 PM
Last Updated : 22 Dec 2016 01:13 PM

வருமான வரித்துறை சோதனை முதல் ராமமோகன ராவ் சஸ்பெண்ட் வரை: தெரிந்திட 10 தகவல்கள்

* தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை உட்பட 14 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீரென சோதனை நடத்தினர். இது, அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்கட்ட சோதனையில் ரூ.30 லட்சம் பணமும், 5 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். | விரிவான செய்திக்கு > > தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை சோதனை - துணை ராணுவப் படை பாதுகாப்புடன் தலைமைச் செயலகம் உட்பட 14 இடங்களில் நடந்தது |

* சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமைச் செயலாளர் அறையில் வருமான வரித்துறையினர் புதன்கிழமை 5 மணி நேரம் சோதனை நடத்தினர். 76 ஆண்டு வரலாற்றில் நாட்டிலேயே முதல்முறையாக ஒரு மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளது இப்போதுதான். | விரிவாக அறிய >>தலைமைச் செயலகத்தில் 5 மணி நேரம் சோதனை: அதிகாரிகள் வேதனை |

* ஆந்திராவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்கள் உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் புதன்கிழமை ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். | அதன் விவரம் >>சித்தூர், குண்டூர், விஜயவாடாவில் உள்ள ராமமோகன ராவ் உறவினர் வீடுகள், அலுவலகங்களிலும் அதிரடி சோதனை |

* மத்திய போலீஸ் படையினர் ஒரு மாநிலத்தில் வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்கு அந்த மாநில டிஜிபி அலுவலகம் அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், தமிழக போலீஸாரிடம் எந்த அனுமதியும் கேட்காமல் மத்திய ஆயுதப்படை போலீஸார் தமிழகத்தில் பாது காப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். | முழு விவரம் >>வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக போலீஸாரிடம் அனுமதி பெறவில்லை |

* புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் சேகர் ரெட்டியும், அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். | விரிவான செய்திக்கு >>ரூ.147 கோடி பணம், 178 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: சேகர் ரெட்டி, உறவினர் கைது: வங்கி அதிகாரிகளும் சிக்குகின்றனர் |

* சேகர் ரெட்டி, ராமமோகன ராவ் ஆகியோர் வருமான வரித்துறையிடம் சிக்கியதையடுத்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த 8 அமைச்சர்களும், சில வங்கி அதிகாரிகளும் சிக்க உள்ளனர். எனவே, இருவருடனும் தொடர்பில் இருந்த அமைச்சர்களும், வங்கி அதிகாரிகளும் தற்போது கலக்கத்தில் உள்ளனர். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளிடம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும்போது மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திடம் முன்அனுமதி பெற வேண்டும். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும் ஒருவரிடம் சோதனை நடத்தும்போது அந்த மாநில ஆளுநருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். எனவே, தலைமைச் செயலாளர் ராமமோகன ராவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவது தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவுக்கு தெரியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* அதிகாரிகளிடமும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனையில் சிக்கிய தமிழக தலைமைச் செயலாளராக இருந்த பி.ராமமோகன ராவ் கடந்து வந்த பாதை இதுதான் > >ராமமோகன ராவ்: உதவி ஆட்சியர் முதல் தலைமைச் செயலாளர் வரை.. |

* வருமான வரித்துறை சோதனை யைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் பி. ராமமோகன ராவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். | முழு விவரம் >>தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரி சோதனை: தலைவர்கள் கருத்து |

* ஊழல், முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போதிய ஆவணங்கள் கிடைக்கும் நிலையில் அவரை கைது செய்ய முடியுமா என்பது குறித்து சட்டவல்லுநர்கள் சிலர் கூறிய தகவல்கள் | முழுமையாக வாசிக்க >>ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்ய யாருடைய அனுமதியும் தேவையில்லை: சட்ட வல்லுநர்கள் கருத்து |

* தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் இருந்த அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழக தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டார். | விவரம் > >தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x