

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சுந்தர ராஜபுரம் பகுதியில் இரு தரப்பி னரிடையே வழிபாடு நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கோயிலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராஜபாளையம் அருகே சுந்த ரராஜபுரம் பகுதியில் குறிப்பிட்ட சமூகத்துக்குச் சொந்தமான மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மேல மற்றும் கீழத் தெருவைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக திருவிழா நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வழிபாடு நடத்த அனுமதிக்கக் கோரி ஒரு தரப்பினர் காத்திருப்புப் போரட்டத் தில் ஈடுபட்டனர்.
இது குறித்து நேற்று காலை வட்டாட்சியர் அலு வலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடந்தது. இதில் சுமூக முடிவு எட்டப்படாததால் அதிகாரிகள் கோயிலை மூடி சீல் வைக்க சென் றனர். அப்போது, மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு கோயிலுக்கு சீல் வைக்கக் கூடாது எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் 2 மணி நேரத் துக்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், பின்னர் கோயில் கதவை மூடி சீல் வைத்துச் சென்றனர்.