

வார்தா புயலுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை பாதிப்பில் இருந்து சென்னை முழுவதுமாக மீண்டுள்ள நிலையில், புறநகர் பகுதிகளில் நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
மின் கம்பங்கள், மின்மாற்றிகளை சீரமைப்பதில் தாமதம் நிலவுவதால் புறநகர் பகுதிகளின் மக்கள் மின் விநியோகம் இல்லாததால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.
தாம்பரம் அடுத்த நெடுங்குன்றத்தில் புயலின்போது சாய்ந்த மின்மாற்றி, மின்கம்பங்கள் ஒரு வாரமாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளதைக் காட்டுகிறது மேலேயுள்ள படம்.
படம்: பி.ஜேம்ஸ் குமார்