Published : 01 Dec 2022 07:24 AM
Last Updated : 01 Dec 2022 07:24 AM
சென்னை: ஸ்லோகா அட்வர்டைசிங் நிர்வாகஇயக்குநர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி கே.ஸ்ரீனிவாஸ், இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின் (ஏஏஏஐ) இயக்குநர்கள் குழுவில் செயலாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விளம்பர செயல்பாடுகள் மற்றும் சந்தையாக்கல் துறைகளில் 30 ஆண்டு அனுபவம் கொண்ட ஸ்ரீனிவாஸ் விளம்பரத் துறையில் அதிக உத்வேகத்துடன் செயல்படுபவர் என்ற பெருமை பெற்றவர். மேலும் பலராலும் அறியப்பட்ட ஆளுமையாகவும் திகழ்கிறார். ஸ்லோகா அட்வர்டைசிங் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமான அவர் திட்டமிடல், அமலாக்கம் மற்றும் எதிர்கால உத்தியை நிர்ணயிப்பதில் வெற்றிகரமான நபராக விளங்குகிறார்.
இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து ஸ்ரீனிவாஸ் கூறும்போது, "கவுரவம் மிக்க இச்சங்கத்தின் இயக்குநர் குழுவில் அங்கம் வகிக்கத் தேர்வுசெய்யப்பட்டிருப்பது எனக்கு அளிக்கப்பட்ட பெரும் கவுரவமாகும். பல்வேறு ஊடகப் பிரிவுகள் மற்றும் விளம்பரதாரர்களுக்கிடையே சிறந்த, நேர்மையான வணிக நடைமுறைகளை கடைபிடிப்பதில் இயக்குநர் குழுவின் பிற உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து நான் முனைப்புடன் செயலாற்றுவேன்" என்றார்.
1945-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஏஏஏஐ, நாட்டின் விளம்பர தொழில்பிரிவில் சுமார் 80% பங்கைக் கொண்டிருக்கும் சிறிய,நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களைத் தனது உறுப்பினர்களாகக் கொண்டு இத்துறையின் உண்மையான பிரதிநிதியாக அதன் வளர்ச்சிக்காகச் செயலாற்றி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT