

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ்.காசிராமலிங்கம் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத் தில் உள்ள அனைத்து நீதிமன்றங் களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி நீதிமன்றத்தின் உள்ளே யும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் நீதித் துறை வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட முடியும். மேலும் தேவை யற்ற பிரச்சினைகளையும் தவிர்க்க முடியும்’’ என அதில் கோரியிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசா ரணைக்கு வந்தபோது, தமிழகத் தில் உள்ள அனைத்து நீதிமன்றங் களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த எவ்வளவு செலவாகும்? எத்தனை கேமராக்கள் தேவைப் படும்? என்பன குறித்து அரசுக்கு உயர் நீதிமன்ற தலைமைப் பதி வாளர் கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அதன் அடிப் படையில் அரசு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த 39 கோடியே 78 லட்சத்து 96 ஆயிரத்து 19 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த நவம்பர் 29-ம் தேதியே அர சாணை பிறப்பிக்கப்பட்டு விட்டது எனக்கூறி அதற்கான உத்தரவு நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி கள், சிசிடிவி கேமரா பொருத்து வதற்காக உடனடியாக ஒப்பந்தப் புள்ளி கோர உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்ரவரி 1-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.