

கறுப்பு பணத்தை வைத்து அரசியல் செய்ய வந்தவர்கள்தான் மோடியின் ரூ.500, ரூ.1000 மதிப்பிழப்பு நட வடிக்கையை எதிர்க்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குற்றம் சாட்டினார்.
காஞ்சிபுரத்தில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் பங்கேற்க வந்த தமிழ் நாடு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் பாஜக ஒரு மாற்றுக் கட்சியாக வளர்ந்து வருகிறது. இருப்பி னும் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும் என்பதையும் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். நாடு முழு வதும் கறுப்பு பணத்தை வைத்து அரசியல் செய்ய வந்தவர்கள் இப்போது முடங்கியுள்ளனர். இதனால் எதிர்க் கட்சிகள் இத்திட்டத்தை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன.
பணம் இல்லா பரிவர்த்தனையை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். மது விற்பனை குறையும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
இதற்காக கல்லூரிகளில் பணம் இல்லா பரிவர்த்தனை குறித்து மாண வர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பல்கலைக்கழக துணைவேந்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆளுநர் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் வேந்தர் ஆவார். அதன் அடிப்படையிலேயே அவர் துணை வேந்தர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆனால் இதற்கு திருமாவளவன் எதிர்ப்பு தெரிவிப்பது ஏற்புடையது அல்ல. கறுப்புப் பண ஒழிப்புக்குப் பிறகு நேர்மையான கட்சிகள் அதிக பலம் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப் படையில் தமிழர்கள் அங்கு செல்வதற்கு அனைத்து உரிமையும் உண்டு. பாஜகவுக்கு கச்சத் தீவை இலங்கை அரசுக்கு கொடுத்ததில் உடன்பாடு கிடையாது. திமுக ஆட்சியில்தான் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பொங்கல் திருநாளில் ஜல்லிகட்டு நடைபெற வேண்டும் என்பதற்காக மிகவும் தீவிரமான கருத் துக்களை உச்ச நீதிமன்றத்தில் பாஜக முன் வைத்துள்ளது. நீதிமன்றத்தில் வெற்றி பெற்று நிச்சயமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றார்.