

சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து சமையல் காஸ் சிலிண்டரை ஏற்றிவந்த ஈச்சர் வகை வாகனம் நேற்றுதிருவல்லிக்கேணி பல்லவன் இல்லம் அருகே திடீரென பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட காஸ் சிலிண்டர்கள் சீட்டு கட்டுகளைபோல் சாலையில்சரிந்தன. இதைக் கண்டு அந்த வழியாக வாகனத்தில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஈச்சர் வாகனத்தை ராட்சதகிரேன் மூலம் நிறுத்தினர்.
தொடர்ந்து சாலையோரம் சிதறி கிடந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.