

அரியலூர் மாவட்டம் சாத்தனூரைச் சேர்ந்த குப்புராமன் மகன் ஞானமூர்த்தி(36). இவர் தடைசெய்யப்பட்ட தமிழர் விடு தலை இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்து வந்தார். கடந்த 2002-ம் ஆண்டு கர்நாடக அமைச்சர் நாகப்பாவை கொலை செய்த வழக்கு, திட்டக்குடியை அடுத்த ராமநத்தத்தில் தங்க ராஜ் என்பவரை கொலை செய்த வழக்கு, ஆண்டிமடத்தில் நகைக் கடை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் இவர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டம், ராமநத் தம் பகுதியில் சுற்றித் திரிந்தபோது அவர் கைது செய்யப்பட்டார். ஞானமூர்த்தி, சந்தன மரக்கடத்தல் வீரப்பனின் கூட்டாளியாக இருந்தவர். கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை கடத்தி கொலை செய்த சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.