Published : 02 Dec 2016 07:55 AM
Last Updated : 02 Dec 2016 07:55 AM

புயல் வலுவிழந்ததால் அபாயம் நீங்கியது: தமிழகம், புதுச்சேரியில் 2 நாள் மழை

தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர், அரசு அதிகாரிகள்

வங்கக்கடலில் மையம் கொண்டி ருந்த புயல் தற்போது வலுவிழந்து வருகிறது. இது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புயலால் நேற்று அதிகாலையில் இருந்து கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வந்தது. பிற்பகலுக்கு மேல் சென்னை உள்ளிட்ட சில மாவட் டங்களில் மழை குறைந்து வானம் மேகங்கள் இன்றி தெளிவாக காட்சியளித்தது. இதற்கிடையில் அந்த புயல் வலுவிழந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் மணிக்கு சுமார் 28 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து, புதுச்சேரிக்கு தென்கிழக்கே சுமார் 210 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இந்த புயலின் மேல் அடுக்குக்கும், கீழ் அடுக்குக்கும் இடையேயான காற்றில் அதிக வேறுபாடுகள் இருப் பதன் காரணமாக, அந்த புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, படிப்படியாக வலுவிழக்கக் கூடும். மேலும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வெள்ளிக்கிழமை (இன்று) அதிகாலை வேதாரண்யம் மற்றும் கடலூர் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்த வரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது விட்டு விட்டு மிதமான மழை பெய்யக்கூடும். சில சமயங்களில் கனமழை பெய்யக் கூடும். அதே சமயத்தில் தரைக் காற்று பலமாக வீசும்.

நேற்று காலை 8.30 மணி அளவில் எடுக்கப்பட்ட மழை அளவின்படி, வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 5 செ.மீ, அதிராம்பட்டினம், நாகப்பட்டினத்தில் 2 செ.மீ, காரைக் கால், கும்பகோணம், மயிலாடு துறை, தஞ்சாவூர், நன்னிலம், திருவையாறு, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் ஆகிய இடங்களில் தலா 1 செ.மீ மழை பெய்துள்ளது.

புயல் எச்சரிக்கை கூண்டு

கடலூர் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 3, புதுச்சேரி துறைமுகத்தில் எண் 6, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் எண் 5, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் எண் 4, சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் எண் 3, என புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கடலோர மாவட்டங் களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப் பட்டினம், விழுப்புரம் மாவட்டங் களில் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை ஏற்கெனவே அறிவித்துள் ளது.

இதற்கிடையில் கடலூர் மாவட் டத்தில் உள்ள கலை மற்றும் பொறி யியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐ ஆகியவற்றுக் கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடை பெற இருந்த அனைத்து தேர்வுகளையும் பல்கலைக்கழக நிர்வாகம் ஒத்திவைத்துள்ளது. மறு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலுவிழுந்து வரும் புயல், கடலூர் அருகே கரையை கடக்க உள்ள நிலையில், அப்பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட தைப் போன்று தனியார் மருத்துவ மனைகளில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறும்போது, “தனியார் மருத்துவ மனைகளில், ஜெனரேட்டர்களை உயரமான இடத்தில் அமைக்கவும், போதிய டீசல் இருப்பில் வைத் திருப்பதையும், போதிய ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பில் வைத் திருக்கவும் ஏற்கெனவே சுகாதாரத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள் ளது. அவ்வப்போது சுகாதாரத் துறை அலுவலர்கள் ஆய்வு மேற் கொண்டு, தயார் நிலையில் இருப்பதையும் உறுதி செய்து வருகின்றனர்” என்றார்.

போதிய மருந்துகள்

சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, “அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து மாத்திரைகள், பாம்பு கடி முறிவு மருந்துகள், கிருமி நாசினி உள்ளிட்ட தேவையான மருந்துகள் அனைத்தும் கையிருப்பில் உள்ளன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x