Published : 27 Dec 2016 09:20 AM
Last Updated : 27 Dec 2016 09:20 AM

‘மனிதர்களுக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எழுத்தின் நோக்கம்’: எழுத்தாளர் வண்ணதாசன் பேச்சு

மனிதர்களுக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம் என்று எழுத் தாளர் வண்ணதாசன் கூறினார்.

கோவை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் எழுத் தாளர்களுக்கு ஆண்டுதோறும் விஷ்ணுபுரம் விருது வழங்கப்படு கிறது. நடப்பாண்டுக்கான விருது எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது.

கோவையில் நடைபெற்ற இந்த விழாவில், கன்னட எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ், விஷ்ணு புரம் விருது மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை எழுத்தாளர் வண்ணதாசனுக்கு வழங்கினார்.

விழாவில், நடிகர் நாசர், எழுத் தாளர்கள் ஜெயமோகன், இரா.முருகன், பவா.செல்லதுரை, மருத் துவர் கு.சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செல்வேந்திரன் இயக்கிய ‘நதியின் பாடல்’ ஆவணப் படம் திரையிடப்பட்டது. வண்ண தாசன் குறித்த ஆவணப்படம், அவரது படைப்புகள் குறித்த நூல் ஆகியவையும் வெளியிடப்பட்டன.

இதில், எழுத்தாளர் ஹெச்.எஸ்.சிவப்பிரகாஷ் பேசும் போது, “இந்திய இலக்கியத்துக்கு தமிழ் எழுத்தாளர்கள் அதிக அளவில் பங்களிப்பு வழங்குகின்ற னர். பொதுவாக, அரசு மற்றும் சில அமைப்புகள் விருது வழங்கும் போது, அரசியல் மற்றும் உள்நோக் கத்துக்காக விருது வழங்குவதாக கருதப்படுகிறது. ஆனால், இதுபோல வாசகர்கள் இணைந்து விருது வழங்கும்போது மட்டுமே படைப்பாளிக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கிறது” என்றார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசும்போது, “எழுத்தாளர்களின் மானசீக எழுத்தாளராகத் திகழ் கிறார் வண்ணதாசன். மனிதர்களின் உணர்ச்சிகள், கற்பனைகளை வெளிக்கொணரும் வகையில் அவரது எழுத்துகள் திகழ்கின்றன” என்றார்.

விருது பெற்ற வண்ணதாசன் பேசும்போது, “ஓர் எழுத்தாளனாக நான் புறக்கணிக்கப்படலாம். ஆனால், எனது எழுத்துகள் எப் போதும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்துள்ளேன். கலைஞர்களும், எழுத்தாளர்களும் ஓரிடத்தில் தேங்கிவிடாமல், அடுத்தடுத்த நகர்வுகளுக்கு ஊர்ந்துகொண்டே இருக்க வேண்டும். எனது வாழ்வில் மனிதர்களைப் பார்த்துக் கற்றுக் கொண்டதையே, எனது எழுத்துகள் மூலம் அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை வறண்ட நிலம் போன் றது. எழுத்தாளன் என்பவன் நிலத் தடி நீர் போன்றவன். மனிதர் களுக்குள் மறைந்துள்ள ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x