Published : 21 Dec 2016 02:35 PM
Last Updated : 21 Dec 2016 02:35 PM

கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படம் வெளியீடு: நாளை வீடு திரும்புவார் என ஸ்டாலின் தகவல்

திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நேற்று வெளி யிட்டது.

இதற்கிடையே கருணாநிதி யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தால் நாளை (வெள்ளிக்கிழமை) வீடு திரும்புவார் என திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

ஒவ்வாமை காரணமாக கடந்த 2 மாதங்களாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த கருணாநிதி, கடந்த 1-ம் தேதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட் டார். நீர்ச்சத்து, ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குவதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது என மருத்துவ மனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.

உடல்நலம் குணமடைந்த கருணாநிதி கடந்த 7-ம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் தொண்டை, நுரையீரல் தொற்றி னால் கடந்த 15-ம் தேதி இரவு அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்றிரவு 11 மணிக்கு அவர் மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மூச்சு விடுவதை எளிதாக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப் பட்டு தொடர் மருத்துவ கண் காணிப்பில் கருணாநிதி இருப்ப தாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த 17-ம் தேதி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் மருத்துவமனைக்குச் சென்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் வித்யா சாகர் ராவ் ஆகியோர் கருணா நிதியின் உடல்நலம் குறித்து திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தனர். நேற்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், இயக்குநர்கள் அமீர், சேரன் உள்ளிட்ட பலர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்துச் சென்றனர்.

இந்நிலையில் கருணாநிதி சிகிச்சை பெறும் புகைப்படத்தை காவேரி மருத்துவமனை நிர் வாகம் நேற்று வெளியிட்டது. அதில் பிரத்யேக நாற்காலியில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார். உடன் மருத்துவர்கள், செவிலியர், பணியாளர்கள் உள்ளனர்.

கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் முழுமையாக கொடுக் கப்பட்டவுடன் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித் துள்ளது.

இந்நிலையில் நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டா லின், ‘‘கருணாநிதியின் உடல்நலம் நன்றாக தேறி வருகிறது. எனவே, வரும் வெள்ளிக்கிழமை (நாளை) அவர் வீடு திரும்புவார்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x