Published : 29 Nov 2022 04:07 AM
Last Updated : 29 Nov 2022 04:07 AM

திண்டுக்கல் | சாதி சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டம்

பிரதிநிதித்துவப் படம்

திண்டுக்கல்: சாதி சான்றிதழ் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மலைவேடன் பழங்குடியின மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மலை வேடன் முன்னேற்றச் சங்கம், தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் ஆகியவை சார்பில் நடந்த இப்போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. டில்லிபாபு தலைமை வகித்தார். இதில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் சண்முகம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி, திண்டுக்கல் மாவட்ட மார்க்சிஸ்ட் செயலாளர் சச்சிதானந்தம் உட்பட பலர் பேசினர்.

சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் ஆகியவை உத்தரவிட்டும் மலைவேடன் பழங்குடி இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்க மறுப்பதைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

நேற்று மாலை வரை நீடித்த போராட்டத்தில் மலைவாழ் மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவர்களை திண்டுக்கல் ஆட்சியர் ச.விசாகன் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x