தமிழக அரசின் புதிய திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.83.41 கோடி பயிர்க் கடன்: கூட்டுறவுத் துறை தகவல்

தமிழக அரசின் புதிய திட்டத்தின் மூலம் 25 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.83.41 கோடி பயிர்க் கடன்: கூட்டுறவுத் துறை தகவல்
Updated on
1 min read

தமிழக அரசின் புதிய திட்டத் தின் மூலம், கடந்த 8 நாட்களில் 25 ஆயிரத்து 174 விவசாயிகளுக்கு ரூ.83 கோடியே 41 லட்சம் பயிர்க் கடனாக வழங்கப்பட் டுள்ளதாக கூட்டுறவுத் துறை தெரிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு களின் பண மதிப்பை நீக்கி மத்திய அரசு கடந்த 8-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இதைய டுத்து வங்கிகளில் பணம் எடுப்பது, பணம் டெபாசிட் செய்தல், பழைய பணத்தை மாற்றுதல் போன்றவற் றுக்கு தினசரி ஒரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு வரு கிறது.

இதில் ஒரு பகுதியாக கூட்டு றவு வங்கிகளுக்கும் கட்டுப்பாடு விதித்ததால், அங்கு பணப் பரிவர்த் தனைகள் முடங்கின. பயிர்க் கடன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வங்கியைப் போல் செயல்பட முடியாது என்ப தால், கூட்டுறவு வங்கிகளில் விவ சாயிகளுக்கு கணக்கு தொடங்கி, அதன் மூலம் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் சமீபத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டுக்கான தடைகளை நீக்கும்படி, தமிழக அதிமுக எம்பிக்கள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து மனு அளித்தனர். கூட்டு றவு வங்கிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும் கோரினர். அன்றே விவசாயிகள் கூட்டுறவு கடன் பெறுவது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசால் வெளியிடப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் வழங்கும் திட்டம் கடந்த 24-ம் தேதி தொடங்கியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in