

சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா எம்.பி. ஒரு மனு தாக்கல் செய்தார். ‘‘மறைந்த முன் னாள் முதல்வர் ஜெயலலிதா வின் தோழியான சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும். அவருக்கு சாதகமாக கட்சி விதி களில் திருத்தம் கொண்டுவர தடை விதிக்க வேண்டும்’’ என்று அதில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக் காக எடுத்து விசாரிக்குமாறு நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம் சசிகலா புஷ்பா சார்பில் மூத்த வழக் கறிஞர் கே.எம்.விஜயன் நேற்று காலை முறையீடு செய்தார். இதை யடுத்து, இந்த வழக்கு நேற்று மதியம் அவசர வழக்காக எடுத்துக்கொள் ளப்பட்டது. முக்கியமான வழக்கு என்பதால், அதிமுக தரப்பில் ஏராள மான வழக்கறிஞர்கள் குழுமியிருந் தனர். வழக்கறிஞர் கே.எம்.விஜயன் தனது வாதத்தில் கூறியதாவது:
சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யவேண் டும் என்று கட்சியின் மூத்த நிர் வாகிகள் கோரிக்கை விடுக்கின்ற னர். டிசம்பர் 17-ம் தேதி (இன்று) பொதுக்குழுவைக் கூட்டி சசி கலாவை பொதுச் செயலாளராக அறிவிக்க உள்ளனர். இது சட்ட விரோதமானது. அதிமுக கட்சி விதி களின்படி ஒருவர் கட்சிப் பதவிக்கு வரவேண்டுமானால், குறைந்தபட் சம் 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். சசிகலா 2012-ல் தான் கட்சியில் சேர்க்கப்பட்டார். நான்கரை ஆண்டுகளாகத்தான் கட்சி உறுப்பினராக உள்ளார். எனவே அவரை பொதுச் செயலாளராக நியமிக்க முடியாது.
தவிர, பொதுச் செயலாளரை மூத்த நிர்வாகிகள் மட்டுமே தேர்வு செய்ய முடியாது. கட்சியின் அனைத்து பிரிவினரும் ஒன்றாக சேர்ந்துதான் தேர்வு செய்ய முடியும். மேலும், சங்கங்கள் விதிகளின்படி (சொசைட்டி சட்டம்) 21 நாட்களுக்கு முன்பு அறிவிப்பு செய்து அதன் பிறகே பொதுக்குழுவைக் கூட்ட முடியும். தற்போது அதுபோல எந்த நடைமுறையையும் பின்பற்ற வில்லை. பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்படுவதை கட்சித் தொண்டர்களும் விரும்பவில்லை. எனவே, அவரை பொதுச் செய லாளராக நியமிக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் தனது வாதத்தில் கூறியதாவது:
இந்த மனுவை தாக்கல் செய் துள்ள சசிகலா புஷ்பா எம்.பி. இப் போது அதிமுக அடிப்படை உறுப் பினர் அல்ல. கட்சியில் இருந்து கடந்த செப்டம்பர் 1-ம் தேதி அவர் நீக்கப்பட்டு விட்டார். இந்த வழக்கைத் தொடர அவருக்கு எந்த தகுதியோ, உரிமையோ இல்லை. அரசியல் உள்நோக்கத்துடன், அரசியல் சுயலாபத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஒரு கோடியே 57 லட்சம் உறுப் பினர்களைக் கொண்ட மிகப்பெரிய கட்சியில் இவர் ஒருவர் மட்டுமே வழக்கு தொடர்ந்துள்ளார். உள்கட்சி பிரச்சினைகளுக்காக நீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்தால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி தானாக ரத்தாகிவிடும் என்ற நிபந் தனையும் கட்சி விதிகளில் ஒன்று. அவற்றை ஏற்றுக்கொண்டுதான் அனைவரும் அதிமுகவில் உறுப் பினர்களாக உள்ளனர். மேலும், அதிமுகவானது சங்க விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட கட்சி அல்ல. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி. உள்கட்சி விவகாரத்தில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டமும் தலையிட முடியாது.
அதிமுகவைப் பொறுத்தவரை, பொதுக்குழுவே பெரியது. பொதுக் குழுவின் முடிவே இறுதியானது. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டவர் கள். எனவே, இந்த மனு விசா ரணைக்கு உகந்தது அல்ல. அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வாதிட்ட கே.எம்.விஜயன், ‘‘சசிகலா புஷ்பாவை அதிமுகவில் இருந்து சட்டப்பூர்வ மாக நீக்கி இதுவரை எந்த கடித மும் மாநிலங்களவைக்கு அனுப்பப் படவில்லை. மனுதாரருக்கும் நோட் டீஸ் தரப்படவில்லை. இந்த நிமிடம் வரை அவர் அதிமுக உறுப்பினராகத் தான் தொடர்கிறார். அந்த தகுதியில் தான் தற்போது இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கே.கல்யாணசுந்தரம், ‘‘இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள் ளப்படுகிறது. ஆனால், தற்போ துள்ள நிலையே நீடிக்க வேண் டும் என்று மனுதாரர் தரப்பு கோருவதுபோல இப்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுகுறித்து எதிர்மனுதாரர்களான அதிமுக, சசிகலா மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் டிசம்பர் 21-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும்’’ என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார்.