Published : 25 Dec 2016 10:58 AM
Last Updated : 25 Dec 2016 10:58 AM

நாடார் அமைப்புகள் சார்பில் ராமதாஸுக்கு பாராட்டு விழா: சென்னையில் ஜனவரி 5-ல் நடக்கிறது

பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸை, திண்டிவனம் தைலாபுரம் தோட் டத்தில் உள்ள அவரது இல்லத் தில் பல்வேறு நாடார் சங்கத் தலைவர்கள் நேற்று சந்தித்து பேசினர். திரைப்படத் தயாரிப் பாளரும் இயக்குநருமான ஜாகு வார் தங்கம், சித்தாலப்பாக்கம் வியாபாரிகள் சங்கப் பொருளாளர் ஆர்.மாதவன், சிம்மப் பேரவை அமைப்பின் தலைவர் இராவணன் இராமசாமி ஆகியோர் தலைமையிலான குழுவில் பல்வேறு நாடார் அமைப்புகளின் நிர்வாகிகள் இடம் பெற்றிருந்தனர்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின்படி தயாரிக்கப்பட்ட 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடநூலில் நாடார் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் இருந்த பாடத்தை நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டதற்காக ராமதாஸுக்கு நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித் தனர். நாடார் சமுதாயம் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான பாடத்தை நீக்குவதற்கு நட வடிக்கை எடுத்ததற்காக ஜனவரி 5-ம் தேதி சென்னையில் ராம தாஸுக்கு அனைத்து நாடார் அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாகவும், அதில் பங்கேற்று சிறப்புரை யாற்றுமாறும் கோரிக்கை விடுத் தனர். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ் பாராட்டு விழாவில் பங்கேற்பதாக உறுதியளித்தார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x