

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க வரும் 24-ம் தேதி கடைசி நாளாகும்.
மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்களிடம் இருந்து ஆன்லை னில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத பாடங்களில் மீண்டும் தேர்வெழுத தனித்தேர்வர்கள் (எச்’ வகையினர்) விண்ணப்பிக்கலாம். மேலும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணை யான தேர்வில் தேர்ச்சி பெற்று, 2 ஆண்டு இடைவெளியும், 2017 ஜனவரி 1-ம் தேதி 16 வயது பூர்த்தி அடைந்தவர்கள் நேரடித் தனித்தேர்வர்களாக விண்ணப் பிக்கலாம் (‘எச்பி’ வகையினர்).
முதன்முதலாக பிளஸ் 2 தேர்வெழுதும் ‘எச்பி’ வகை நேரடித் தனித்தேர்வர்கள் பகுதி 1 மற்றும் பகுதி 2 மொழிப் பாடங்களுடன் பின்வரும் ஐந்து பாடத் தொகுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.
இதன்படி, பாடத் தொகுப்பு எண் 304-ல் வரலாறு, பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், 305-ல் பொருளியல், அரசியல் அறிவியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், 306-ல் பொரு ளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், இந்தியக் கலாச்சாரம், 307-ல் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவியல், சிறப்பு மொழி (தமிழ்), 308-ல் பொருளியல், வணிகவியல், கணக்குப் பதிவி யல், வணிகக் கணிதம் ஆகிய பாடத்தொகுப்பில் ஏதேனும் ஒன்றில் தேர்வு எழுதலாம்.
தனித்தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு சென்று 19-ம் (நாளை) தேதி முதல் வரும் 24-ம் தேதி மாலை 5.45 மணிக்குள் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான அறிவுரைகள் ஆகியவற்றை >www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் மற்றும் அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம். மறுமுறை தேர்வெழுதுவோர் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 வீதம் தேர்வுக் கட்டணமும், அத னுடன் இதரக் கட்டணமாக ரூ.35-ம் செலுத்த வேண்டும். ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும்.
நேரடித் தனித்தேர்வர்கள் (‘எச்பி’ வகை தனித்தேர்வர்கள்) தேர்வுக் கட்டணமாக ரூ.150-ம், இதர கட்டணமாக ரூ.35-ம், கேட்டல்/ பேசுதல் திறன் தேர்வு ரூ.2 என மொத்தம் ரூ.187-ம், ஆன்லைன் பதிவுக் கட்டணமாக ரூ.50-ம் செலுத்த வேண்டும். இக்கட் டணங்களை சேவை மையத்தில் பணமாக செலுத்த வேண்டும். பார்வையற்றோருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.