

தமிழக அரசின் தலைமைச் செயலா ளர் அறையில் வருமான வரிச் சோதனை நடைபெற்றது குறித்து முதல்வர் விளக்கமளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் கீழவெண்மணி கிராமத்தில் நேற்று அவர் செய்தி யாளர்களிடம் கூறியது:
புயல் பாதிப்புக்கு நிவாரணம் கேட்டு டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்த முதல்வர் பன்னீர்செல்வம், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட் டுள்ள வறட்சி, உயிரிழப்புகள் குறித்து எதுவும் பேசியதாக தகவல் இல்லை. தமிழகத்தில் நிர்வாகம் ஸ்தம்பித்துப் போயுள்ளது. அமைச்சரவைக் கூட் டங்கள் சிலமுறை நடந்தும்கூட அதிலும் வறட்சி, விவசாயிகள் மரணம் குறித்து எதுவும் விவாதிக்கப் பட்டதாகத் தெரியவில்லை.
கட்சிப் பதவி, புதிய பொறுப்பு களை தக்கவைத்துக்கொள்ளவே அமைச்சர்கள் முழுமையாக செயல்படுகிறார்கள். மாநில தலைமைச் செயலாளரின் அறையில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை குறித்து தமிழக முதல்வர் வாய்திறக்கவில்லை. முதல்வரின் மவுனத்துக்கு காரணம் என்ன என் பது விளக்கப்பட வேண்டும் என்றார்.