

பணி இட மாறுதலுக்காக ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் கலால் மற்றும் சுங்கத்துறை பெண் ஆணையர் ஜானகி அருண்குமார் சென்னையில் கைது செய்யப் பட்டுள்ளார். மேலும், 4 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
சென்னையில் மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையின் சென்னை மண்டல தலைமை ஆணையராக பணி செய்து வந்தவர் ஜானகி அருண்குமார். இவர் சுங்கத்துறை யில் பணி மாறுதல் வழங்குவதற்காக லஞ்சம் வாங்குவதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் புகார் வந்தது. அதன்பேரில் கடந்த 6 மாதங்களாக சிபிஐ அதிகாரிகள் ஜானகி அருண்குமாரின் நட வடிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், சுங்கத்துறை அதி காரி ஒருவரின் பணி இட மாறுத லுக்கு ரூ.2 லட்சம் லஞ்சம் கேட் டுள்ளார். இந்த விவகாரம் சிபிஐ அதிகாரிகளின் கவனத்துக்கு சென் றது. பணி இட மாறுதல் கேட்டவரிட மிருந்து லஞ்சப் பணத்தை பால வாக்கத்தில் உள்ள ஜானகி அருண் குமாரின் வீட்டில் வைத்து கடந்த 29-ம் தேதி இரவு பெற உள்ளதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் பால வாக்கத்தில் உள்ள அவரது வீட்டை ரகசியமாக கண்காணித்தனர். லஞ்சப் பணம் வாங்கும்போது, ஜானகி அருண்குமாரை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக சுற்றி வளைத்தனர். உடனடியாக அவரை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து ஜானகி அருண்குமாருக்கு சொந்தமான மற்றும் அவரது தொடர்பில் உள்ள மேலும் 4 பேரின் வீடு, அலுவலகம் என 7 இடங்களில் சிபிஐ அதிகாரி கள் இரவோடு இரவாக சோதனை நடத்தினர். இதில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் தங்க நகைகள், இன்னும் சில ஆவணங்களும் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
வங்கி லாக்கரிலும் ஏராளமான நகை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது குறித்து சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஜானகி அருண்குமாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஜானகி அருண்குமாருக்கு உதவியதாக கலால் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் மீதும் வழக்கு பதியப்பட் டுள்ளது. அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என சிபிஐ அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.