

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந் தவர் சஞ்சய் படேல் இவரது மனைவி மிருணாளின் படேல். இவர் கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி புதுச்சேரி சிபிசிஐடி போலீஸாரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், புதுச்சேரி வைசியாள் வீதியை சேர்ந்த பொறியாளர் விஜயகுமார் (35) மற்றும் அவரது மனைவி சுமிதா ஆகியோர் இணையதள வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று தெரிவித்தனர்.
அதனை நம்பி விஜய குமாரிடம் ரூ.85 லட்சத்தை கொடுத்தோம். ஆனால் அவர் லாபத்தை கொடுக்கவில்லை. மேலும் கொடுத்த பணத்தை யும் கொடுக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலை யில் விஜயகுமாரை போலீ ஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர். தொடர்ந்து நேற்று முன்தினம் அவரை காவலில் எடுத்து விசாரித்த னர். அதன் பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தப் பட்டது. வீட்டில் இருந்த கணினி, பிரிண்டர் போன்ற பல லட்சம் மதிப்பிலான பொருட் களை பறிமுதல் செய்தனர்.