

பெரும்பாலான வங்கிகளில் பணத் தட்டுப்பாடு நிலவியதால் சம்பள பணத்தை எடுக்க முடியாமல் அரசு, தனியார் துறை ஊழியர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். ஏடிஎம்களிலும் பணம் இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கறுப்புப் பணம், ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கை என்று கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகளை பண மதிப்பு நீக்கம் செய்து கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. போதுமான அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வராததால், பொதுமக்கள் கடந்த 25 நாட்களாக கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 30-ம் தேதி அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் அரசு ஊழியர்கள் தங்களது சம்பள பணத்தில் பாதித் தொகைக்குமேல் எடுத்துவிட்டனர். பொதுவாக தனியார் துறைகளில் 4 முதல் 10-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படுகிறது. தற்போது சில தனியார் நிறுவனங்கள் முன்கூட்டியே ஊழியர்களின் சம்பளத்தை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டன.
இதையடுத்து, சம்பளப் பணத்தை எடுக்க ஏராளமானோர் வங்கிகளுக்கு வரத் தொடங்கி யுள்ளனர். ஆனால், பணத் தட்டுப் பாடு காரணமாக சில வங்கிகளில் குறைந்த அளவே பணம் விநி யோகம் செய்யப்பட்டது. பல வங்கிகளில் பணம் இல்லை என்று கூறி மக்களை திருப்பி அனுப்பிவிட்டனர். மாதத் தொடக்கம் என்பதால், வீட்டு வாடகை கொடுக்கவும் பால், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கும் பணம் கொடுக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து திருவல்லிக் கேணியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் பணம் பெற வந்த முகமது சாலி கூறும்போது, ‘‘வங்கியில் பணம் இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு டோக்கன் அளித்து திங்கட்கிழமை வருமாறு கூறிவிட்டனர். இதனால், அவசர தேவைக்குக்கூட பணம் எடுக்க முடியவில்லை. ஒரு சில வங்கிகளில் ரூ.4000, ரூ.6000 என கொடுக்கின்றனர். இதனால் மீண்டும் மீண்டும் வங்கிகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.’’ என்றார்.
அரும்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சி.சாமிவேல், எஸ்.லட்சுமிதேவி ஆகியோர் கூறும்போது, ‘‘பணத்தை எடுப் பதற்காக இங்குள்ள சில வங்கி களுக்கு சென்றால் உங்களது வங்கிக் கணக்கு எங்கு உள்ளதோ அந்தக் கிளைக்கு செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்புகின்றனர். காரணம் கேட்டால் போதிய அளவு பணம் இல்லை என்கின்றனர். மாதத்தின் முதல் வாரம் என்பதால் வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை சமாளிக்க முடியாமல் திண்டாட வேண்டியுள்ளது’’ என்றனர்.
சேப்பாக்கத்தில் உள்ள வங்கி அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘‘பல வங்கிகளில் போதுமான பணம் இல்லை. எனவேதான், அந்தந்த வங்கிக் கிளையில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பணத்தை அளித்து வருகிறோம். பணம் உள்ள வங்கிக் கிளைகளிலும் வாரம் ரூ.24 ஆயிரம் உச்சவரம்பு தொகையை வழங்க முடியவில்லை. அதிகபட்சமாக ரூ.12 முதல் 14 ஆயிரம் மட்டுமே வழங்கி வருகிறோம்’’ என்றார்.
கொடுங்கையூர் பாரத ஸ்டேட் வங்கி, மகாகவி பாரதியார் நகர் இந்தியன் வங்கி போன்றவற்றில் காலை 7 மணியில் இருந்தே பணம் எடுப்பதற்காக பொது மக்கள் வரிசையில் நின்றிருந்த னர். 10 மணிக்கு வங்கிகள் திறக்கப்பட்டதும் முதலில் 100 பேருக்கு டோக்கன் வழங்கப் பட்டது. குறைவான அளவே பணம் விநியோகிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கொடுங்கையூர் ஸ்டேட் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்ததால், வங்கி களில் கூட்டம் இல்லை. நேற்றும் பெரும்பாலான ஏடிஎம்கள் செயல்படவில்லை. செயல்பட்ட ஒரு சில ஏடிஎம் மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்தன. எனவே, அந்தப் பணத்தையாவது எடுத்துவிட வேண்டும் என்பதற்காக ஏடிஎம் மையங்கள் முன்பு மக்கள் காத்துக்கிடந்தனர்.
ரூ.100, ரூ.50 பதுக்கல்
சில்லறை தட்டுப்பாடு இருப்ப தால் 100, 50 ரூபாய் நோட்டுகள் வைத்திருப்போர், அவற்றை புழக் கத்துக்கு விடாமல் பதுக்குகின் றனர். அதனால், 2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள் அதை மாற்ற முடியாமல் தவிக்கின்றனர். புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் வங்கிகளுக்கு முழுமை யாக வரவில்லை. வங்கிகள், ஏடிஎம் பகுதிகளில் கூட்டம் அலைமோதுவதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதை தவிர்க்க போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.