அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை

அதிமுகவை யார் வழி நடத்துவது?- தமிழக அமைச்சர்கள் ஆலோசனை
Updated on
2 min read

போயஸ் தோட்டத்தில் நடந்த கூட்டத்தில் சசிகலா, முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவை வழி நடத்தப் போவது யார் என்பதை முடிவு செய்ய, 2-வது நாளாக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினர்.

அதிமுக பொதுச் செயலாளரா கவும், தமிழக முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி காலமானார். இதையடுத்து, முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதே நேரம் அதிமுகவின் அடுத்த பொதுச் செய லாளர் யார் என்பதற்கான சதுரங்கம் தற்போது தொடங்கியுள்ளது.

கடந்த தேர்தலுக்கு முன், சட்டப் பேரவையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதத்தின்போது, ‘‘ எனக்குப் பின்னும் அதிமுக இருக்கும்” என்று ஜெயல லிதா அறிவித்தார். ஆனால், தனக்குப்பின் கட்சியை யும், ஆட்சியையும் யார் வழிநடத்துவார் என்பது தொடர்பாக அவர் எந்த ஒரு தகவலையும் அளிக்க வில்லை. இதனால் அவரது மறைவுக்குப் பின் புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்வதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அப் பதவிக்கு ஜெயலலி தாவின் தோழியும், 30 ஆண்டுகளாக அவருடன் இருந்தவருமான சசிகலா வின் பெயர் தற்போது பிரதானமாக பேசப்படுகிறது.

அதே நேரம், ஆட்சி மாற்றம் சுமூகமாக நடந்ததைப் போல், கட்சி நிர்வாக மாற்றமும் சுமூகமாக நடக்க வேண்டும் என்று அதிமுகவினர் எதிர் பார்க்கின்றனர். இதையடுத்து கடந்த இரு தினங்களாக அமைச்சர்கள் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் போயஸ் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 7-ம் தேதி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, உள்ளிட்ட அமைச்சர்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முக்கிய நிர்வாகிகளும், ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இதில், செங்கோட்டையன் மாலை வரை அங்கிருந்ததாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இதே போல், நேற்று காலையும் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், இ.மதுசூதனன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தனர். அங்கு ஒருமணி நேரத்துக்கும் மேல் அவர்கள் சசிகலா முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். அதன் பின், ஒவ்வொருவராக புறப்பட்டுச் சென்றனர். நேற்று காலையும் செங்கோட்டையன் போயஸ் தோட்ட இல்லத்துக்கு வந்தார். அவரும் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

தேர்தல் ஆணைய விதிகளின் படி, ஆண்டுக்கு ஒருமுறை அங்கீகரிக் கப்பட்ட அரசியல் கட்சிகளின் பொதுக் குழு கூட்டப்பட வேண்டும். அதிமு கவைப் பொறுத்தவரை கடந்தாண்டு டிசம்பர் மாதம் 30-ம் தேதி அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதன் அடிப்படையில் வரும் 30-ம் தேதிக்குள் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இதன்படி, ஜெயலலிதா மறைவு தொடர்பான சம்பிரதாயங்கள் முடிந்ததும், விரைவில் அதிமுக பொதுக்குழு கூட்டப்படும் என்றும், அதில் பொதுச் செயலாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in