திண்டுக்கல் | ரயில் நிலையத்தில் மர்ம பொருள்? - வெடிகுண்டா என சோதனை

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்த ரயில்வே போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு சோதனை செய்த ரயில்வே போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள்.
Updated on
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் சிவப்பு வண்ணத்தில் வெடிகுண்டு போன்று ஒரு மர்ம பொருள் கிடந்தது. போலீஸாரின் சோதனையில் அது வெடிகுண்டு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

மதுரை ரயில்வே பாதுகாப்புப் படை எஸ்.ஐ. ஜெயக்குமார், திண்டுக்கல் காவல் ஆய்வாளர் சுனில்குமார், ரயில்வே காவல் ஆய்வாளர் அருள் ஜெயபால், தனிப்பிரிவு காவலர் ராஜேஷ்குமார் மற்றும் மோப்ப நாய் மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் ரயில் நிலைய பகுதி,தண்டவாளம் மற்றும் பயணிகளின் உடமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in