வில்லிவாக்கம் 10 மாடி குடியிருப்பில் மின் கசிவால் தீ விபத்து: உடனடி நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

வில்லிவாக்கம் 10 மாடி குடியிருப்பில் மின் கசிவால் தீ விபத்து: உடனடி நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

Published on

வில்லிவாக்கத்தில் 10 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

சென்னை வில்லிவாக்கம் எம்டிஎச் சாலையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடி யிருப்பு உள்ளது. 10 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடத்தில் 124 குடும்பங்கள் வசிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 400-க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தனர். இந் நிலையில் பிற்பகல் 2.15 மணியள வில் குடியிருப்பின் தரை தளத்தில் இருந்த மின்சார வயரில் திடீரென தீ பிடித்தது. இந்தத் தீ குப்பைகள் குவித்து வைக்கப்பட் டிருந்த சிம்னி கூண்டு பகுதிக்கு வேகமாக பரவியது.

இந்த சிம்னி கூண்டு தரைத் தளத் தையும் 10 தளங்களையும் இணைக்கும் வகையில் அமைக் கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தளத்தில் இருப்பவர்களும் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை இந்த கூண்டில் போடுவது வழக்கம். அப்படி போடப் படும் குப்பை தரை தளத்தை வந் தடையும் வகையில் சிம்னி கூண்டு அமைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து மொத்தமாக குப்பைகளை அப்புறப் படுத்துவது வழக்கம்.

ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல சிம்னி கூண்டின் தரைத் தளத்தில் குப்பைகள் சேர்ந்து கிடந்தது. அந்த சிம்னி கூண்டு பகுதியில் தீ பிடித்ததால் அதிலிருந்து வந்த புகை அனைத்து தளங்களுக்கும் பரவியது. தரை தளத்தில் தீப்பிடித்த 2 நிமிடங்களில் அது பத்தாவது தளம் வரை சென்றது. அத்துடன் தீயில் எரிந்த கேபிள்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியன.

சிம்னி மூலமாக வீடுகளுக்குள் கரும்புகை நுழைய, அங்கிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தரைப்பகுதிக்கு ஓடிவந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்த சிலரும் குடியிருப்புக்குள் நுழைந்து புகைக்கு நடுவே சிக்கிக்கொண்டவர்களை மீட்டு வெளியே கொண்டுவந்தனர். அத்துடன் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து வில்லி வாக்கம் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் சப்ளையை துண்டித்தனர். பிறகு மின் வயரில் பிடித்த தீயை அணைத் தனர். அவர்களை தொடர்ந்து அம்பத்தூர், ஜெஜெ நகர், கீழ்ப் பாக்கத்தில் இருந்து 6 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட னர். வீடுகளுக்குள் சிக்கியிருந்த சிலரையும் அவர்கள் மீட்டனர். 2 ஸ்கை லிப்ட் தீயணைப்பு வாகனங் களும் இந்த தீயணைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் பலரது வீடுகளில் இருந்த மின்சாதன பொருட்கள் இந்த தீ விபத்தில் சேதம் அடைந்தன. மின்வயர்களும் நாசமாகின.

சென்னை வில்லிவாக்கம் எம்டிஎச் சாலையில் தீ விபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியேறும் புகை. (அடுத்தபடம்) அவசர அவசரமாக வெளியேறிய குடியிருப்புவாசிகள் வெளியே நிற்கின்றனர். படங்கள்: ம.பிரபு

விபத்தை சாதகமாக்கி 12 சவரன் திருட்டு

தீ விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்யப்போகிறோம் என்கிற பெயரில் பலர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தனர். இதில் திறந்து கிடந்த ஒருவரின் வீட்டின் பீரோவை உடைத்து 12 சவரன் நகைகளை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in