சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் கலந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம்

சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் கலந்து மக்களுக்கு குடிநீர் விநியோகம்

Published on

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் தினமும் 11 டன் குளோரின் செலுத்தி, மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் ஆகிய 5 நீரேற்று நிலையங்கள், நெம்மேலி, மீஞ்சூர் ஆகிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் 1,000 மில்லியன் லிட்டர் பாதுகாப்பான குடிநீர் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

தினமும் 300 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து இந்தகுடிநீரின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வந்தது. தற்போது பருவமழை காரணமாக தினமும்600 இடங்களில் மாதிரிகள் எடுத்து ஆய்வு செய்யப்படுகிறது. இதுவரை 24,520 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுத்து,குடிநீரின் தரம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

காய்ச்சி பருக வேண்டும்: சென்னை குடிநீர் வாரியத்தால் தினமும் மேற்கண்ட 5 நீரேற்று நிலையங்கள் மற்றும்16 குடிநீர் விநியோக நிலையங்களில் 11 டன் குளோரின் செலுத்தப்பட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 12 லட்சம் குடியிருப்புகளுக்கு இதுவரை 10.40 லட்சம்குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வழங்கப்பட்டும் வருகிறது. மழைக்காலங்களில் தொற்று நோய் பரவாமல் இருக்க, 15லிட்டர் குடிநீருடன் ஒரு குளோரின் மாத்திரையை கலந்து, அதன்பிறகு 2 மணி நேரம் கழித்து அந்தகுடிநீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பருவ மழைக் காலங்களில் குடிநீரை மக்கள் காய்ச்சிப் பருகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in