

ஆர்எஸ்எஸ் உட்பட 40 இந்து இயக்கங்களின் ஆலோசனை முகாம்சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது அடுத்த ஆண்டுசெயல்படுத்தக் கூடிய முக்கியதிட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆர்எஸ்எஸ் மற்றும் அனைத்து இந்து இயக்கங்கள் ஒன்று கூடி, ஒவ்வோர் ஆண்டும் செயல் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துவது வழக்கம்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்து அமைப்புகளின் ஆலோசனை முகாம் சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்துமுன்னணி உட்பட 40 இந்து அமைப்புகளும், அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடர்ந்து, அடுத்த ஆண்டுக்குசெயல்படுத்த வேண்டிய திட்டங்கள் வகுத்துக் கொடுக்கப்பட்டன. அடுத்த ஆண்டுக்கான செயல்திட்டத்தில் முக்கியமாக கல்விக்கொள்கை இடம் பெற்றிருப்பதாகவும், அது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆர்எஸ்எஸ் முக்கிய நிர்வாகிகள், பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.