‘இலங்கைத் தமிழர்களின் விடுதலையும், இந்தியாவின் பாதுகாப்பும் ஒற்றை புள்ளியில் உள்ளன’ - பழ.நெடுமாறன்

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.படம்: ஆர்.வெங்கடேஷ்
தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நேற்று நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.படம்: ஆர்.வெங்கடேஷ்
Updated on
1 min read

தஞ்சாவூர்: இலங்கைத் தமிழர்களின் விடுதலையும், இந்தியாவின் பாதுகாப்பும் ஒற்றை புள்ளியில் அமைந்துள்ளன என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில், மாவீரர் நாள் நிகழ்ச்சி மற்றும் நினைவு முற்றத்தின் 10-ம் ஆண்டு தொடக்க விழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னாள் மத்திய நிதித் துறை இணையமைச்சர் செஞ்சி ந.ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினார்.

பின்னர், பழ.நெடுமாறன் பேசியது: விடுதலைக்குப் போராடிய நாடுகள் தோற்றது இல்லை. ஐ.நாவில் தமிழ் ஈழமும் இடம்பெறும். இலங்கையில் கடற்படை தளம், சாலை, ரயில் வசதிகளை சீனா ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மக்கள் மீதான அக்கறையால் சீனா இதைச் செய்யவில்லை. இந்தியாவை அச்சுறுத்தத்தான். இலங்கைத் தமிழர்களின் விடுதலையும், இந்தியாவின் பாதுகாப்பும் ஒற்றைப் புள்ளியில் உள்ளன என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்வில் உலகத் தமிழர் பேரமைப்பின் செயலாளர்கள் குபேந்திரன், சி.முருகேசன், துணைத் தலைவர் மணிவண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நினைவு தின சுடர் ஏற்றப்பட்டு, மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in