Published : 01 Dec 2016 10:41 AM
Last Updated : 01 Dec 2016 10:41 AM

உடல் உறுப்பு தானத்தில் முதலிடம் தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது: இரண்டாவது முறையாக வழங்கப்பட்டது

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கிய தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை சார்பில் தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) நடத்திய 7-வது இந்திய உடல் உறுப்பு தான விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நாட்டிலேயே உடல் உறுப்பு மற்றும் திசு தானத்தில் சிறந்து விளங்கும் தமிழகத்துக்கு விருது வழங்கப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா வழங்கிய விருதை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதில் சிறந்த மருத் துவமனைகள் பிரிவில் சென்னை அப்போலோ மருத்துவமனை மூன்றாம் விருதைப் பெற்றது. சிறந்த ஒருங்கிணைப்பாளருக்கான விருது சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றும் செந்தில் என்பவருக்கு வழங்கப் பட்டது.

தமிழக அரசு விருது பெற்றது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியதாவது:

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது முறையாக தமிழகம் விருதை பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தனி ஆணையத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த ஆணையத்துக்கு அவரே தலைவராகவும் உள்ளார். முதல் வரின் நேரடி கண்காணிப்பில் ஆணையம் செயல்படுவதால், இந்த இலக்கை தமிழகம் அடைந்துள்ளது. தமிழக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஏழை எளிய மக் களுக்கு இலவசமாக செய்யப்படு கிறது. எந்த மாநிலத்திலும் இல் லாத வகையில் தமிழகத்தில் முத லமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இது வரை தமிழகத்தில் 895 கொடை யாளர்களிடம் 4992 உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன.

இவ்வாறு சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தலைமையில் இந்திய உடல் உறுப்பு தான நாள் நிகழ்ச்சி புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உடல் உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சையில் தொடர்ந்து 2வது முறையாக முதன்மை மாநிலத்துக்கான விருதை தமிழக அரசு சார்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். உடன் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு தனி ஆணையத்தை முதல்வர் ஜெயலலிதா உருவாக்கினார். அந்த ஆணையத்துக்கு அவரே தலைவராகவும் உள்ளார். முதல்வரின் நேரடி கண்காணிப்பில் ஆணையம் செயல்படுவதால், இந்த இலக்கை தமிழகம் அடைந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x