

ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:
2017-ல் ஹஜ் பயணம் மேற் கொள்ள விரும்பும் தமிழகத் தைச் சேர்ந்த முஸ்லிம் பெரு மக்களிடமிருந்து, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, விண்ணப் பங்களை வரவேற்கிறது. சென்னையில் எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸி டவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2017-க் கான விண்ணப்பப் படிவங்களை வரும் ஜனவரி 2-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம். இந்த விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப் பப் படிவத்தை நகல்கள் எடுத் தும் உபயோகப்படுத்தலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பப் படிவங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிடம் மனு தாரர்கள் சமர்ப்பிக்க ஜனவரி 24-ம் கடைசி தேதியாகும். வாழ் நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. விண்ணப்பதாரர்கள் 2017-ம் ஆண்டு ஜனவரி 24 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி வரையில் செல்லக்கூடிய, இயந்திரம் மூலமாக படிக்கத் தக்க பன்னாட்டு பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும். IFSC குறியீடு உடைய வங்கியில் உள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.