

புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து 176 நிவாரண மையங்களை சென்னை மாநகராட்சி தயார் நிலையில் வைத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘நாடா’ புயலை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி, மழைநீர் தேங்க வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட 34 இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட 108 மோட்டார் பொருத்தப் பட்ட படகுகள் தயார் நிலையில் உள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்காக 176 நிவாரண மையங்களும், 4 பொது சமையல் கூடங்களும் தயார் நிலையில் உள்ளன.
மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவும், கொசுக்களை கட்டுப் படுத்தவும் 3,337 தொழிலாளர்களுடன் 420 அழுத்த தெளிப்பான்கள், கைகளால் இயக்கும் 245 புகையடிக்கும் கருவிகள் மற்றும் 41 வாகன புகையடிக்கும் கருவிகளும் வைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் தலா ஓர் ஐஏஎஸ் அதிகாரி என 15 அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்ற னர். இதுமட்டுமல்லாது, மாநகராட்சி மூலம் பராமரிக்கப்படும் 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ் சாலைதுறையின் பராமரிப்பில் உள்ள 6 சுரங்கப்பாதைகளில் உயர்அழுத்த மின் மோட்டார்கள், சூப்பர் சக்கர் வாகனங்கள் தயாராக உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு குழு வீதம் மீட்புப் பணிகளில் ஈடுபட மீட்புக் குழுவினர் அமர்த்தப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 40 வீரர்களுடன் 4 மிதவை மீட்பு படகுகள் அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள 18 உயர் மின்கோபுர விளக்குகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க மாநகராட்சி மூலம் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 என்ற தொலைபேசி எண்களிலும், 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205 ஆகிய வாட்ஸ்அப் எண்களிலும் பதிவு செய்யலாம். பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.