

வேந்தர் மூவிஸ் மதன் ரூ.7 கோடி வரை பணம் வாங்கிக்கொண்டு, அதை திருப் பித் தரவில்லை என்றும், இதுதொடர்பாக எஸ்ஆர்எம் பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்துவின் அலுவலக ஆட்கள் தனது வீ்ட்டுக்கு வந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சினிமா பைனான்சியர் முகுந்சந்த் போத்ரா என்பவர், தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதன்பேரில் பச்சமுத்துவுக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் பச்சமுத்து நிபந்தனை முன்ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் பச்சமுத்து மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ‘போத்ரா புகாரின் பேரில் இது வரை யாரையும் போலீஸார் கைது செய்ய வில்லை. அந்த வழக்கில் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முறையாக பின்பற்றியுள்ளேன். விசாரணை நிலுவை யில் உள்ளபோது போத்ரா ஊடகங் களை தவறாக பயன்படுத்தி அவ்வப் போது இதுதொடர்பாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்’ என கூறியிருந் தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், போத்ரா புகாரின் பேரில் பச்சமுத்து மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.