

ஊரகத் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் ப.மோகன் பேசியதாவது: கட்டுமானத் துறையில் எல் அண்ட் டி நிறுவனத்துடன் இணைந்து 500 பேருக்கு ரூ.1.20 கோடி செலவில் விரைவில் பயிற்சி அளிக்கப்படும். ஜவுளித் துறையில் கைத்தறி மற்றும் துணி நூல் இயக்குநரகம் மூலம் 1,149 பேருக்கு ரூ.25.27 லட்சத்தில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.
வங்கி மற்றும் நிதி சேவைப் பணிகள் குறித்து திறன் எய்தும் பயிற்சிகள் ஐ.சி.டி. நிறுவனம் மூலம் 2 ஆயிரம் பேருக்கு ரூ.99.50 லட்சத்தில் பயிற்சி அளிக்கப்படும். வெல்டிங் மற்றும் பற்றவைத்தல் திறன் மேம்பாட்டுக்கு எஸ்.என்.ஆர். நிறுவனம் மூலம் பயிற்சி தரப்படும்.
தோல் மற்றும் தோல் பொருட்கள் தயாரித்தல் குறித்த திறன் மேம்பாட்டுக்கு எப்.டி.டி.ஐ. மூலம் 480 பேருக்கு ரூ.1.44 கோடி செலவில் பயிற்சி அளிக்கப்படும்.