

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமான் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தல குண்டு ஒன்றிய நாம் தமிழர் கட்சி சார்பில் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நடிகர் சீமான் பேசியது: 2016-ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிடும். அந்தத் தேர்தலில் வலுவான அமைப்பாக மாறி, 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்றார்.