Published : 17 Dec 2016 03:21 PM
Last Updated : 17 Dec 2016 03:21 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு முத்தரசன் கண்டனம்

பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கடும் கண்டனத்திற்குரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன. பெட்ரோல் விலை ரூ.2.21 ம், டீசல் விலை ரூ.1.79 ம் உயர்த்தப்பட்டுள்ளன.

சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை ரூ 68.41 க்கும், டீசல் விலை 58.28 க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இத்தகைய சூழலில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது கடும் கண்டனத்திற்குரியது.

நாட்டில் பல பகுதிகளில் வறட்சி பாதித்துள்ளது. இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்துள்ளன. ஆனால் இது போன்ற எத்தகைய சூழலையும் கணக்கில் கொண்டதாக தெரியவில்லை.

சர்வதேச சூழலில் ஏற்ற இறக்கங்களை ஆராய்ந்து அதற்கு ஏற்ப முடிவுகளை எடுப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறினாலும், அவைகள் எப்போதும் விலையை உயர்த்துவதையே குறிக்கோளாக கொண்டுள்ளன.

எனவே விலை உயர்வை மறுபரிசீலனை செய்ய எண்ணெய் நிறுவனங்களை மத்திய அரசு நிர்பந்திக்க வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x