

சிறார் சட்டத்தில் வயது வரம்பை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள தாக அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
சென்னை திருவான்மியூரில் இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் நாடு முழு வதும் இருந்து 250-க்கும் அதிகமான இந்து இயக்கங்கள் பங்கேற்று அரங்குகளை அமைத்துள்ளன. இந்த ஒரு வார கண்காட்சி, இன்று நிறைவடைகிறது. 2 நாள் பயணமாக சென்னை வந்திருந்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மேனகா காந்தி, ஞாயிற் றுக்கிழமை காலை, இந்து ஆன்மிக கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
பசுவதை தடுப்புச் சட்டம் பற்றி எனது கருத்துகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்ச ரிடம் தெரிவிப்பேன். இந்து சமய நிறுவனங்கள், பல்வேறு சமூக தொண்டுகளை செய்து வருகின் றன. இதுபோன்ற கண்காட்சிகள் நாடெங்கும் நடத்தப்பட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பெரும்பாலானவை 16 முதல் 18 வயது வரை உள்ளவர் களால்தான் நடக்கிறது என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். சிறார் சட்டம் இருப்பதையும், அதனால் குறைந்த தண்டனை யோடு தப்பி விடலாம் என்றும் தெரிந்தே பலர் இந்தக் குற்றங்களை செய்கின்றனர். எனவே, சிறார் சட்டத்துக்கான வயது வரம்பை 16 ஆக குறைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
மேலும் 18 வயதுக்கு கீழ் உள்ள ஆதரவற்றவர்களை பாதுகாப்பான இல்லங்களில் சேர்க்க இச்சட்டத்தில் விரைவில் வழிவகை செய்யப்படும். அவர்களுக்கான செலவை அரசு ஏற்றுக் கொள்ளும்.
பெண்கள் செல்போன் பயன்ப டுத்துவதால் பாலியல் வன் முறைக்கு ஆளாவதாக கர்நாடக அரசு கூறியிருப்பது அர்த்த மற்றது. பாலியல் வன்கொடுமை போன்ற முக்கியமான பிரச்சி னையை முறையாக கையாள வேண்டும். பெண்களுக்கு கல்வி, தன்னம்பிக்கை, தைரியம் கொடுத்து. இதுபோன்ற குற்றங் களை எதிர்கொள்ள அவர்களை தயார்படுத்த வேண்டும். அப்போது தான் தவறு செய்ய நினைக்கும் ஆண்கள் பயப்படுவார்கள். இவ்வாறு மேனகா காந்தி கூறினார்.