Published : 27 Dec 2016 09:51 AM
Last Updated : 27 Dec 2016 09:51 AM

அதிமுகவுக்கு நெருக்கடியான நேரத்திலும் நிதானம் காட்டும் ஸ்டாலினை சீண்டி பார்க்க வேண்டாம்: எஸ்.ஆர்.பி.க்கு திமுக கண்டனம்

அதிமுகவுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்திலும் நிதானம் காட்டும் திமுக பொரு ளாளர் மு.க.ஸ்டாலினை சீண்டிப் பார்க்க வேண்டாம் என மாநிலங் களவை அதிமுக துணைத் தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனுக்கு திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

பல்கலைக்கழக துணை வேந் தர்கள் சசிகலாவை சந்தித்து அதிமுகவுக்கு தலைமை ஏற்கு மாறு வலியுறுத்தினர். இதைக் கண்டித்துதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளரும், எதிர்க் கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அந்தக் கடிதத்தை முழுமையாக படிக்காமல் ஸ்டாலின் மீது குற்றம்சாட்டியிருக்கிறார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். இந்திரா, ராஜீவ், நரசிம்ம ராவ் ஆகியோரிடம் அரசியல் செய்து, மூப்பனாரின் உதவியால் வளர்ந்து அவரது பிள்ளையை நட்டாற்றில் விட்டுவிட்டு பதவிக்காக தமாகாவை காட்டிக் கொடுத்தவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

‘காலி பெருங்காய டப்பா’ என அதிமுக பட்டம் கொடுத்தது, இப்போது அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவுக்கு விசுவாச மாக இருப்பது எல்லாம் அவரது உரிமை. ஆனால், ஸ்டாலினை வம்புக்கு இழுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிறார். முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் இருக்கும்போது சசிகலா முதல்வராக வேண்டும் என அமைச்சர்கள் வெளிப்படையாக பேட்டியளித்து வருகின்றனர். எனவேதான் பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதா என்பதை ஆளுநர் உறுதிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சித் தலைவராக அவரது கடமையை செய்துள்ளார்.

அதிமுகவுக்குள் இருந்து கொண்டே அரசியல் செய்யும் சக்திகளை தட்டிக்கேட்க துணிவு இல்லாமல் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டுவது எஸ்.ஆர்.பாலசுப்பிர மணியத்தின் வயதுக்கும், அனு பவத்துக்கும் ஏற்றதல்ல. அரசியல் இலக்கணத்தை எங்கோ குத்த கைக்கு விட்டுவிட்டு ஸ்டாலினை சீண்டுவதை ஏற்க முடியாது.

அதிமுகவுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடியான நேரத்திலும் நிதானம் காட்டுகிறார் ஸ்டாலின். எனவே, அவரை வீணாக சீண்ட வேண்டாம். கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல் எறிவது அதிமுகவுக்கு எந்த வகையிலும் உதவாது. சொந்த வீட்டில் சண்டை போட்டுக் கொண்டு அடுத்த வீட்டுக்காரர்களிடம் அசிங்கமான அரசியல் நடத்த வேண்டாம் என்று மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x