Published : 14 Dec 2016 09:01 AM
Last Updated : 14 Dec 2016 09:01 AM

வார்தா புயல் பாதிப்பு: குறைவான பேருந்துகளே இயக்கம்

சென்னையில் நேற்று முன்தினம் வீசிய வார்தா புயலால் 50 மாநகர பேருந்துகள் சேதமடைந்தன. பேருந்து நிலையங்கள், பணிமனைகளில் தடுப்பு சுவர்கள், மேற்கூரைகள் சேதமடைந்தன. குறிப்பாக, பாடியநல்லூர், மகாகவி பாரதி நகர், பெரம்பூர், செம்மஞ்சேரி ஆகிய பணிமனைகளில் சுற்றுச் சுவர்கள், கூரைகள் விழுந்தன. ஆதம்பாக்கம் பணிமனையில் மரங்கள் சாய்ந்தன.

வடபழனி, தியாகராய நகர், அடையார், வண்ணாரப் பேட்டை, திருவான்மியூர், பிராட்வே, தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சில பணிமனைகளில் டீசல் டேங்குகளில் மழைநீர் புகுந்தது. மின் சப்ளையும் பாதிக்கப்பட்டது. இதனால் நேற்று 50 சதவீதத்துக்கும் குறைவாக மாநகர பேருந்துகளே இயக்கப்பட்டன. உட்பகுதிக்கு செல்லும் மாநகர பேருந்துகள், சிறிய பேருந்துகளின் சேவையும் நிறுத்தப்பட்டன. முக்கிய சாலைகளில் காலை 9 மணிக்கு பிறகே கணிசமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x