திருப்பதி உண்டியலில் குவியும் ரூ.500, 1000 நோட்டுகள்: டெபாசிட் பெற மறுக்கும் வங்கிகள்

திருப்பதி உண்டியலில் குவியும் ரூ.500, 1000 நோட்டுகள்: டெபாசிட் பெற மறுக்கும் வங்கிகள்
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் காணிக்கையாக செலுத்தப்படுகின்றன. ஆனால் இந்த நோட்டுகளைப் பெற வங்கிகள் மறுப்பு தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தது. இந்நிலையில், பக்தர்கள் தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் அதிக அளவில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை மட்டும் உண்டியலில் ரூ. 2.47 கோடியை பக்தர்கள் காணிக் கையாக செலுத்தி உள்ளனர். இதில் ரூ. 500, 1000 நோட்டுகளின் மதிப்பு மட்டும் ரூ.90 லட்சம் ஆகும். இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு திருமலை யில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஆந்திரா வங்கிக் கிளைகளுக்கு தேவஸ்தான அதிகாரிகள் சென்றனர்.

ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை இனி வாங்கிக் கொள்ள முடியாது என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், தேவஸ்தான அதிகாரிகள் பணத்துடன் திரும்பி வந்துவிட்டனர். இந்தப் பணத்தை என்ன செய்வது என தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in