டிசம்பர் 7, 8- ல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜன. 2, 3-ல் நடைபெறும்

டிசம்பர் 7, 8- ல் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜன. 2, 3-ல் நடைபெறும்
Updated on
1 min read

டிச.7, 8 தேதிகளில் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் ஜன.2 மற்றும் 3-ம் தேதிகளில் நடை பெறும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “டிசம்பர் 7 மற்றும் 8-ம் தேதி நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதி நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள மற்றொரு சுற்றறிக்கையில், “சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் புயல் காரணமாக டிசம்பர் 14-ம் தேதி ஒத்திவைக்கப் பட்ட அரையாண்டு தேர்வுகள் ஜனவரி 5-ம் தேதி நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in