

திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து கவலை அடைந்தோம்.
பொதுவாழ்வில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட அவர் விரைவில் பூரண குணமடைந்து மீண்டும் அரசியல் பணியாற்ற வாழ்த்துகிறோம்'' என முத்தரசன் கூறியுள்ளார்.