பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு 

கோப்புப் படம் | கலந்தாய்வு
கோப்புப் படம் | கலந்தாய்வு
Updated on
1 min read

சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு வரும் 28 மற்றும் 29ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 28ம் தேதி நடைபெறவுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (BT Deployment Counselling) மட்டும் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

இக்கலந்தாய்வு டிசம்பர் 9ம் தேதி அன்று நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கான பணிநிரவல் கலந்தாய்வு (PG Deployment Counselling) திட்டமிட்டபடி நவம்பர் 29ம் தேதி நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in