ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக தாம்பரம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

Published on

சென்னை: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல கால பூஜைகள் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக சென்று வருகின்றனர். ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இந்த வாராந்திர சிறப்பு ரயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26,ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வரும்.

அதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரயில் (06067), நவ.29, டிச.6, 13, 20, 27, மற்றும் ஜன. 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும்.

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை அடையும். இந்த சிறப்புரயிலுக்கான டிக்கெட் முன்பதிவுஇன்று (நவ.25) காலை 8 மணிக்கு தொடங்குகிறது என ரயில்வே தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in