

மத்திய அரசு பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளிலும் மின்னணு பண பரிவர்த்தனை மூலம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுமா? என மாணவர்களின் பெற்றோர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
அரசு பள்ளிகளில் மிகவும் குறை வான கட்டணமே வசூலிக்கப்படு வதால் அங்குள்ள மாணவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வெவ்வேறு பெயர் களில் கட்டணம் வசூலிக்கிறார்கள். டியூஷன் கட்டணம், சீருடை கட்ட ணம், பாடப் புத்தக கட்டணம், நூலக கட்டணம், கட்டிட பராம ரிப்பு கட்டணம் என பல்வேறு விதமான கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன. ஆனால், அவை அனைத்துக்கும் முறையான ரசீதுகள் கொடுக்கப்படுவதில்லை. இந்த கட்டணங்களை வருடாந்திர, அரையாண்டு, காலாண்டு, மாதாந் திர என வெவ்வேறு நிலைகளில் பெற்றோர்கள் செலுத்துகிறார்கள்.
தற்போது 500, 1000 ரூபாய் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கடும் பணத் தட்டுப்பாடு நிலவு கிறது. வங்கிக்கணக்கில் இருக் கின்ற பணத்தை ரொக்கமாக எடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் விரும்பும் தொகையை எடுக்க முடிய வில்லை. இந்த நிலையில், மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் மின் னணு பண பரிவர்த்தனை முறை யில் கல்விக் கட்டணங்கள் வசூலிக் கப்படுகின்றன. ரொக்க பணமில் லாத, மின்னணு பண பரிவர்த்தனை முறையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கேந்திரீய வித்யாலயா பள்ளிகள் இந்த முறையை அறி முகப்படுத்தியுள்ளன.
கட்டணப் புகாருக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில், மத்திய அரசு பள்ளிகளைப் போல தனியார் பள்ளிகளிலும் மின்னணு பணபரி வர்த்தனை மூலம் கல்விக்கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத் தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாண வர்களின் பெற்றோர் மத்தியில் உண்டாகியிருக்கிறது. மின்னணு பண பரிவர்த்தனை முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறைக்கு வந்தால் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழும் புகார் களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படும் என்றும் பெற்றோர்கள் கருது கிறார்கள். தங்களிடம் வசூலிக்கப் படும் கட்டணங்களுக்கு ஆன்லை னில் உடனடியாக ரசீது கிடைத்து விடும். அத்தாட்சி இருப்பதால், கூடுதல் கட்டணம் வசூலிக்க பள்ளி நிர்வாகத்தினர் தயங்குவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
பிரச்சினைக்குத் தீர்வு
இதுதொடர்பாக தமிழ்நாடு மாணவர் பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர் அருமைநாதன் கூறும் போது, “மத்திய அரசு பள்ளி களைப் போல தனியார் பள்ளிகளி லும் மின்னணு பண பரிவர்த்தனை முறையில் கல்விக்கட்டணம் செலுத் தும் முறை அறிமுகப்படுத்தப் பட்டால் பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். தற்போது நிலவும் பணத் தட்டுப்பாடு பிரச்சி னைக்கு இந்த வசதி ஒரு தீர்வாக இருந்தாலும் மின்னணு பண பரி வர்த்தனை மூலம் கட்டணத்தை செலுத்துவதால் எவ்வளவு தொகை செலுத்துகிறோமோ அதற்கான ரசீதும் உடனடியாக வந்துவிடும். இந்த திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டால் தனியார் பள்ளி நிர் வாகத்தினர் பெற்றோரிடம் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்க முடியாது.
தற்போது சீருடை கட்டணம், போக்குவரத்து கட்டணம், கட்டிட பராமரிப்பு கட்டணம் என பல்வேறு கட்டணங்களை வெவ் வேறு பெயரில் உள்ள வங்கிக் கணக்குகளின் செலானில் பணம் கட்டச் சொல்கிறார்கள். ஸ்வைப்பிங் மிஷின் வந்தால் இவை அனைத் துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப் படும்” என்றார்.
தற்போது பள்ளிகளில் வசூ லிக்கப்படும் கட்டணத்துக்கு முறை யான ரசீது கொடுக்கப்படு வதில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு ஒரு கணக்கு, கூடு தலாக வசூலிக்கப்படும் கட்டணத் துக்கு வெவ்வேறு கணக்குகளைப் பள்ளி நிர்வாகத்தினர் பராமரித்து வருவதாகவும் பெற்றோர்கள் குறைகூறினர்.
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் ஜி.ஆர்.நந்தகுமார் கூறும்போது, ‘‘தனியார் பள்ளிகளில் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக கல்விக்கட்டணங்களை செலுத்தும் வசதி கொண்டுவந்தால் நல்லது தான். இது மிகவும் வரவேற்கக்கூடிய திட்டம். இதன்மூலம் மாணவர் களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது ஒரு கணக்குக்குள் வரும். மேலும், நம்பகத்தன்மை ஏற்படும். அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு வேண்டுமானால் இந்த திட்டம் இடையூறாகத் தோன்றலாம்” என்றார்.