

கிண்டி சிறுவர் பூங்காவில் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. பூங்காவுக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய புயலால் இங்கு மரங்கள் வேரோடு சாய்ந்ததைத் தொடர்ந்து, கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பசுமை போர்வை குறைந்து, நிழல் பரப்பும் குறைந்துள்ளது.
கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்தால் அங்குள்ள உயிரி னங்களுக்கு பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. பூங்காவில் மரங்கள் விழுந்ததைத் தொடர்ந்து, அங்கு பார்வையாளர்கள் அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள் ளது. பார்வையாளர்கள் பலர் குழந்தைகளுடன் வந்து, ஏமாற்றத் துடன் திரும்பிச் சென்றவாறு உள்ளனர்.
ஏமாற்றம்
அவ்வாறு திரும்பிச் சென்ற அசோக்- பிரபா தம்பதியிடம் கேட்ட போது, “நாங்கள் தருமபுரியில் இருந்து சென்னையில் உள்ள உற வினர் வீட்டுக்கு வந்திருக்கிறோம். பூங்காவை சுற்றிக்காட்டுவதாக கூறித்தான் எனது குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந் தேன். இப்பூங்கா தற்போது மூடப் பட்டிருப்பது ஏமாற்றமளிக்கிறது” என்றனர்.
இது தொடர்பாக பூங்கா அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “பூங்கா வளாகத்தில் 200-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இதில் சுமார் 100 மரங்கள் விழுந்துவிட்டன. அவற்றை அகற்றும் பணி நடை பெற்று வருகிறது. இப்பணியை ஒரு வாரத்தில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதன் பிறகு பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.
புயலின் தாக்கத்தால், இங் குள்ள விலங்கினங்களுக்கு எந்