Published : 22 Dec 2016 08:56 AM
Last Updated : 22 Dec 2016 08:56 AM

ரூ.1,500 கோடி செலவில் சென்னையில் 2-வது விமான நிலையம்: மத்திய விமானப் போக்குவரத்து துறை செயலர் தகவல்

சென்னையில் ரூ.1,500 கோடி செலவில் 2-வது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை செயலர் ஆர்.என். சவுபே தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

சுற்றுலாத் தலமான கொடைக் கானலில் நீராதாரங்களைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப் பட்டது. கொடைக்கானலில் நீரா தாரங்களை அதிகரிக்க புதிய தடுப்பணைகள் கட்டப்பட வேண் டும். நீராதாரங்களை மறைத்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும். கொடைக் கானலில் ஹெலிபேட் அமைப்பதற் கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டது.

தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை செயலர் ஆர்.என்.சௌபே செய்தியாளர் களிடம் கூறியதாவது: தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு விமானங்கள் இறங்க இடவசதி இல்லாத நிலை ஏற்படும். எனவே சென்னையில் 2-வது விமான நிலையம் ரூ.1,500 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.

ரூ.4,500 கோடி செலவில் நாடு முழுவதும் செயல்படாமல் உள்ள போர் விமானத்தளங்கள் சீரமைக்கப்பட்டு சிறிய ரக உள்ளூர் விமான சேவை தொடங்கப்பட வுள்ளது. கொடைக்கானலில் உள்ள நீராதாரங்கள் இங்கு வசிக்கும் மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே போதுமானதாக இல்லை. கொடைக்கானலில் நீரா தாரங்களைப் பெருக்கும் வகையில் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப் பாடு விதிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x