சென்னை விமான நிலையத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை

சென்னை விமான நிலையத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல்: மத்திய உளவுத்துறை எச்சரிக்கை
Updated on
1 min read

5 அடுக்கு பாதுகாப்பு - பார்வையாளர்களுக்கு தடை

சென்னை விமான நிலையத்துக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக் கத்தை சேர்ந்தவர்களால் தென்னிந் தியாவில் உள்ள விமான நிலை யங்களுக்கு அச்சுறுத்தல் இருப் பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப் பாக சென்னை விமான நிலை யத்தில் கூடுதல் பாதுகாப்பு நட வடிக்கைகள் எடுக்கும்படி மத்திய உளவுத்துறை எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை தகவல் வந்தவுடன் சென்னை விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1 மணி முதல் பாதுகாப்பு நடவடிக் கைகள் அதிகப்படுத்தப்பட்டன. விமான நிலையம் முழுவதும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

விமான நிலையத்துக்கு வெளியே மாநில போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர். நிலையத்துக்கு உள்ளே 5 அடுக்குகளில் பாது காப்பு போடப்பட்டுள்ளது. பயணி களையும், அவர்களின் உடைமை களையும் கூடுதல் நேரமெடுத்து சோதனை செய்கின்றனர்.

குறிப்பாக வெளிநாடுகளுக்கு செல்லும் விமானத்திலும், அதில் செல்லும் பயணிகளிடமும் சோத னைகள் கடுமையாக்கப்பட்டுள் ளன. பாதுகாப்பு காரணங்களால் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ம் தேதி வரை இந்த பாது காப்பு நடவடிக்கைகள் கடைபிடிக் கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in